தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உசிலம்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளியில் 11 மாணவர்கள் பயின்று வருகின்றனர். சமீபத்தில் இந்த பள்ளியில் தமிழக முதல்வரின் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தில் குழந்தைகளுக்கு அதே ஊரில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த முனிய செல்வி என்பவர் சமையல் செய்து உணவு கொடுத்துள்ளார். இதற்கு அங்கு பயிலக்கூடிய மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகளின் பெற்றோர்கள் காலை உணவு திட்டத்தை புறக்கணித்தனர். தங்கள் குழந்தைகள் காலை உணவு திட்டத்தில் சாப்பிட மாட்டார்கள் என்று கூறினார்.
இந்நிலையில் இப்ப பிரச்சனை குறித்து தகவல் கிடைத்ததும்,இன்று குழந்தைகளை சாப்பிட வைப்பதற்காக கோவில்பட்டி கோட்டாட்சியர் ஜேன் கிறிஸ்டி பாய் தலைமையிலான வருவாய் துறை , ஊரக வளர்ச்சித்துறை, மற்றும் காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் குழந்தைகள் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள் என்று மறுத்து விட்டனர்.
இரண்டு குழந்தைகள் மட்டும் உணவு அருந்ததிதாக கூறப்படுகிறது. இது குறித்த செய்திகள் வெளியான நிலையில் தமிழக சமூக நலன் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், விளாத்திகுளம் போது சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் ஆகியோர் பள்ளிக்கு சென்று ஆய்வு நடத்தினர்.
அமைச்சர் கீதா ஜீவன் பள்ளி குழந்தைகள், பள்ளி தலைமையாசிரியர் மற்றும் காலை உணவு திட்ட சமையலர் ஆஙியோரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினார். மேலும் காலை உணவு திட்டத்தில் தயாரிக்கப்பட்ட உணவின் தரத்தினையும் ஆய்வு செய்தார்,இதைத் தொடர்ந்து அமைச்சர் கீதா ஜீவன் செய்தியாளர்களிடம் பேசுவையில்ஊரில் உள்ளவர்களுக்கும், காலை உணவு திட்டத்தில் சமையல் செய்பவருக்கும் தனிப்பட்ட பிரச்சினை காரணமாக பெற்றோர்கள் குழந்தைகளை சாப்பிட அனுமதிக்க மறுத்து வருவதாகவும், குழந்தைகளுக்கு எதுவும் தெரியவில்லை.. இந்த பிரச்சினை விரைவில் சரி செய்யப்படும் என்றார்.
பள்ளி குழந்தைகளின் பெற்றோர் தரப்பில் கேட்டபோது எங்கள் குழந்தைகளுக்கு காலை உணவு வேண்டாம் மற்றபடி ஜாதி அடிப்படையில் இதை நாங்கள் பார்க்கவில்லை அவுளதான் என்று கூறினர். பேசுவதற்கும் ,பேட்டி தருவதற்கும் மறுத்து விட்டனர்.பேட்டி: அமைச்சர் கீதா ஜீவன்
Vilathikulam
உசிலம்பட்டி பள்ளி பிரச்சனை - விரைவில் சரி செய்யப்படும் -அமைச்சர் கீதா ஜீவன் பேட்டி!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட இஸ்லாமிய பெண்கள்?
அடுத்த
மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் சுமங்கலி பூஜை : 350 பெண்கள் கலந்துகொண்டு சிறப்பு வழிபாடு!
இதையும் படிக்கலாம்
வேப்பமுத்து எடுக்கசென்ற மூதாட்டி பரிதாபமாக உயிரிழப்பு.
22 Jul 2026
எத்தனை நாள் நாட்கள் உள்ளே இருக்கிறானோ அவ்வளவு சீக்கிரம் திமுக ஆட்சிக்கு வரும் விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் பேச்சு!
22 Jul 2026
மதிமுகவில் தொடங்கி திமுக வரை நடந்தது என்ன?
22 Jul 2026
தனி அரசாங்கம் நடத்தும் பேரூராட்சி நிர்வாகத்தின் தொடர் கூட்டுக்கொள்ளை!
21 Jul 2026