அரசு மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழாவில் கலந்து கொண்ட விளாத்திகுளம் MLA !
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சிவஞானபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழாவில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்.மேலும் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ - மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கினார்கள்.விழாவில் இடைநிலைக்கல்வி மாவட்ட கல்வி அலுவலர் (பொறுப்பு) கண்ணன் பள்ளி தலைமை ஆசிரியை மாயா உட்பட ஆசிரிய - ஆசிரியைகள் மாணவ - மாணவிகள் கலந்து கொண்டனர்.