சாலையை அகலப்படுத்த எம்எல்ஏ மார்க்கண்டேயன் சட்டப்பேரவையில் கோரிக்கை!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை கேள்வி நேரத்தின்போது தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன், விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட   விளாத்திகுளம் TO ராமநாதபுரம் மாவட்டம்பெருநாழி சாலை, விளாத்திகுளம் - எப்போதும்வென்றான் சாலை,நாகலாபுரம் TO விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடி சாலை அகலப்படுத்த  கோரிக்கை வைத்தார். 

அதேபோல் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் புதிதாக போடப்பட்ட  நெடுஞ்சாலை மற்றும் கிராமப்புற சாலைகளில் இருபுறமும் பக்கவாட்டு மண் அமைத்து தர வேண்டும் என்று விளாத்திகுளம் பகுதி மக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.