ஆறுதல் கூறி நிதி உதவி வழங்கிய விளாத்திகுளம் MLA மார்கண்டேயன் ! 


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி பரமன்பச்சேரி கிராமத்தில் சோமசுந்தரம் காஞ்சனாதேவி தம்பதியினரின் இரண்டு வயது சபீனாபானு என்ற பெண் குழந்தை வீட்டு வாசலின் முன்பு உள்ள தண்ணீர் நிரம்பிய அண்டாவில் எதிர்பாராத விதமாக விழுந்து உயிரிழந்தார்.உயிரிழந்த சிறுமி சபீனாபானுவின் குடும்பத்தாரை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர்,சட்டமன்ற சட்ட விதிகள் ஆய்வு குழு தலைவர்,தலைமை செயற்குழு உறுப்பினர் மார்கண்டேயன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிதி உதவி வழங்கினார்.