தியாகி இம்மானுவேல் சேகரன்  திருவுருவப்படத்திற்கு விளாத்திகுளம் எம்எல்ஏ மார்கண்டேயன் மரியாதை!

தியாகி இமானுவேல் சேகரனின் 67-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தியாகி இமானுவேல் சேகரனுக்கு பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பாரதியார் பேருந்து நிலையம் முன்பு அமைக்கப்பட்டுள்ள திருஉருவப்படத்திற்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

உடன் விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு விளாத்திகுளம் பேரூர் கழகச் செயலாளர் வேலுச்சாமி, விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யா அய்யன்ராஜ், விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இம்மானுவேல், தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மகேந்திரன்,  விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.