விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம உதவியாளர்கள் காத்திருப்பு போராட்டம்!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தின் சார்பில் இன்று கிராம உதவியாளர்கள் ஏராளமானோர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சங்கத்தின் தூத்துக்குடி மாவட்டத் தலைவர் முருகராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த காத்திருப்பு போராட்டத்தில், 1.கிராம உதவியாளர்கள் தங்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும், 2.கருணை அடிப்படையில் வாரிசு வேலை வழங்கிட வேண்டும், 3.சிபிஎஸ் திட்டத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற/மரணமடைந்த கிராம உதவியாளர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட தொகையையும், அதற்குண்டான அரசு பங்கிடையும் உடனடியாக வழங்க வேண்டும், 4.புதிதாக பணியில் சேர்ந்த கிராம உதவியாளர்களுக்கு நிரந்தர சிபிஎஸ் எண் வழங்க வேண்டும், 5.கிராம உதவியாளர்களை மாற்றுப் பணிக்கு பயன்படுத்தி வருவதை நிறுத்த வேண்டும்.. என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கெளரவ ஆலோசகர் பழனிசாமி, வட்டத் தலைவர் குப்புராஜ், செயலாளர் சாலமன், பொருளாளர் சண்முக ராமநாதன் உள்ளிட்ட ஏராளமான தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தைச் சேர்ந்த கிராம உதவியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.