விளாத்திகுளம் அருகே நீதிபதி சென்ற கார் விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலி!
தூத்துக்குடியில் இருந்து ஜிப்சம் ஏற்றுக்கொண்டு அரியலூர் சென்ற லாரி மீது பின்னால் தஞ்சாவூர் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து மோதி விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்தில்,
பாதுகாப்பு பணிக்கு சென்ற காவலர்,ஓட்டுனர் ஒரு வழக்கறிஞர் உட்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
விசாரணையில் அவர் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியை சேர்ந்த நீதிபதி பூர்ண ஜெயந்த் ஆனந்த் தற்போது தஞ்சாவூர் மாவட்ட மாவட்ட நீதிமன்ற நீதிபதியாக இருப்பதாக கூறப்படுகிறது,
இதில் பயணித்த நீதிபதி உட்பட உட்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
படுகாயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தஞ்சாவூரைச் சேர்ந்த நீதிபதி உட்பட ஆறு பேர் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று விட்டு ஊருக்கு திரும்பி உள்ள போது இந்த விபத்து நடைபெற்றுள்ளது.
இந்த விபத்து குறித்து மாசார்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.