எட்டயபுரம் அருகே தண்ணீர் எடுக்கச் சென்ற போது தவறி விழுந்து இறந்த மூதாட்டி உடலை உடற்கூறு ஆய்வு செய்யாமல் ஒப்படைக்க வேண்டும் கிராம மக்கள் சாலை மறியல்!


சாவில் சந்தேகம் இருப்பதால் உடற்கூராய்வு செய்துதான் உடலை தருவோம் என்று கூறும்- காவல்துறை பரபரப்பு!



தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் அருகே உள்ள இளம்புவனம் கிராமத்தைச் சேர்ந்த பொண்ணு கருப்பசாமி என்பவருடைய மனைவி  சகுந்தலா (73). இவர் நேற்று மாலை வெளியே தண்ணீர் எடுக்க செல்லும்போது தவறி விழுந்து மயக்கம் அடைந்ததாக அவரது மகள் லதா அவரை ஆட்டோவில் எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். மூதாட்டி சகுந்தலாவை  பரிசோதனை செய்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதையெடுத்து லதா தனது தாயின் உடலை ஊருக்கு  கொண்டு செல்ல முயன்ற போது  எட்டையாபுரம் போலீசார் தடுத்து நிறுத்தி  சாவில் சந்தேகம் இருப்பதாகவும் உடற்கூறு ஆய்வு செய்து தான் உடலை ஒப்படைக்க முடியும் என்று போலீசார் தெரிவித்துவிட்டனர்.



இந்த நிலையில் மூதாட்டி சகுந்தலா சாவின் தங்களுக்கு எவ்வித சந்தேகமும் இல்லை எனவே அவரது உடலை உடற்கூறு ஆய்வு செய்யாமல் தங்களிடம் ஒப்படைக்கும்படி  மூதாட்டி சகுந்தலாவின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் இளம்புவனம் ஊர் முன்பு கோவில்பட்டி - எட்டயபுரம் சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் கிடைத்ததும் எட்டயபுரம் போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். உடற்கூறாய்வு செய்யாமல் உடலை ஒப்படைப்பது குறித்து உயர் அதிகாரிகளிடம் பேசிவிட்டு சொல்வதாகவும் அதுவரை போராட்டத்தை கைவிடுமாறு போலீசார் தெரிவித்ததை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர். 



தங்களுக்கு மூதாட்டி  சாவில் எவ்வித சந்தேகம் இல்லை என்பதால் உடற்கூறு ஆய்வு செய்யாமல் உடலை ஒப்படைக்க வேண்டும் இல்லை என்றால் தங்களது போராடத்தை தொடர்வோம் என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.