விளாத்திகுளம் அருகே அதிவேகத்தில் சென்று விபத்து ஏற்படுத்திய மணல்லாரியை சிறைபிடித்த கிராம மக்கள்!



தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள  கொல்லம்பரம்பு - சந்திரகிரி பகுதியில் தற்போது அனுமதி இல்லாமல் செயல்பட்டு வரும் சரள் மண் குவாரியில் இருந்து விளாத்திகுளம் மற்றும் ஓட்டப்பிடாரம் பகுதிகளுக்கு டிப்பர் லாரியில் எடை அனுமதிக்கப்பட்ட அளவை மீறி லாரிகள் மூலம் சரள் மண் எடுத்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது,இந்த நிலையில்    விளாத்திகுளம் அருகே உள்ள முத்துக்குமராபுரம் கிராம வழியாக செல்லும் சரள் மண் குவாரி லாரிகள் அதிக பாரத்துடனும் எடையுடனும் கிராமப் பகுதிகளில் மின்னல் வேகத்தில் செல்வதால் அடிக்கடி  ஆடுகள் மற்றும் கோழிகள் மீது ஏற்றி விபத்து ஏற்பட்டு வந்துள்ளது, இதனை அப்பகுதி கிராம மக்கள் அடிக்கடி லாரி ஓட்டுநர்களிடம் அதிவேகமா செல்லக்கூடாது என்று பலமுறை எச்சரித்துள்ளனர்.


இந்த நிலையில் இன்று காலை சரள் மண் ஏற்றி வந்த லாரி ஒன்று அதிவேகமாக வந்து  சாலையோரம் அமைக்கப்பட்டு இருந்த குடிநீர் இணைப்பு குழாயை சேதப்படுத்தியாதல், ஆத்திரமடைந்த கிராம மக்கள் லாரியை சிறை பிடித்தனர்.



இது குறித்து அந்த கிராம மக்கள் கூறுகையில் சரள் மண் ஏற்றி வரும் லாரிகள் அதிவேகத்தில் செல்வதால் வீடுகளில் அதிர்வு ஏற்படுத்துவதாகவும், எடை அதிகமாக உள்ளதால், சாலைகள் சாலைகள் சேதம் அடைவதாக கூறுகின்றனர். இதுகுறித்து அரசு அதிகாரிகளுக்கு பலமுறை தகவல் தெரிவித்தும் அதனை கண்டு கொள்ளவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளனர்.



அதேபோல் தற்போது  பள்ளிகளுக்கு கோடை விடுமுறை என்பதால் குழந்தைகள் சாலையில் விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டு வருவதாகவும், அதே மீறி குழந்தைகள் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தால், லாரி ஓட்டுநர்கள் குழந்தை மீது மோதுவது போல் விபத்து ஏற்படுத்தும் வகையில் லாரிகளை இயக்குவதாக  குற்றம் சாட்டுகின்றனர்.