விளாத்திகுளம் அருகே கோலாகலமாக நடைபெற்ற கிராமத்து விநாயகர் சதுர்த்தி திருவிழா - விவசாயம் செழிக்க மழைவேண்டி சிறப்பு ஹோமம் நடைபெற்றது.
நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி திருவிழா வெகு விமர்சியாக சிறப்பாக கொண்டாடப்பட்டு அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள அயன் ராஜாபட்டி கிராமத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ ராஜ விநாயகர் திருக்கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி காலையில் கணபதி பூஜை மற்றும் விவசாயம் செழிக்க மலை வேண்டி சிறப்பு ஹோமம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ஸ்ரீ ராஜ விநாயகருக்கு பால், தேன், மஞ்சள் இளநீர், உள்ளிட்ட 18 வகையான பொருட்களைக் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது.
இதன் பின்னர் ஸ்ரீ ராஜ விநாயகர், ராஜ கம்பீர தோற்றத்தில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு அன்னதான நிகழ்ச்சியும் நடைபெற்றது.