பேருந்து வரவில்லை என்று சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்: ஊரில் யாரும் இல்லாத நேரத்தில் நகை திருட்டில் ஈடுபட்ட இரண்டு சிறார்கள் உற்பட 5 பேர் கைது: 10 பவுன் தங்க நகை பறிமுதல்!




தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கீழக்கல்லூரணி, இந்த கிராமத்திற்கு விளாத்திகுளம் அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து மேலக்கல்லூரணி, கீழக்கல்லூரணி கிராம வழியாக மாவிலோடை கிராமத்திற்கு தினமும் நான்கு முறை அரசு பேருந்து இயக்கப்படுவது வழக்கம், இந்த நிலையில் தீபாவளிக்கு முந்தைய நாள் மழையின் காரணமாக பேருந்து மேலக்கல்லூரணி, கீழக்கல்லூரணி கிராமத்திற்கு வராமல் இருந்ததாக கூறப்படுகிறது, இதனால் ஆத்திரமடைந்த கீழக்கல்லூரணி கிராம மக்கள் அனைவரும் ஒன்று கூடி  நாகலாபுரம்  - காடல்குடி சாலை கீழக்கல்லூரணி விளக்கில் கடந்த 19-10-2025 அன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


பின்னர் அனைவரும் வீட்டுக்கு சென்ற நிலையில் கீழக்கல்லூரணி கிராமத்தைச் சேர்ந்த மாரிச்சாமி என்பவரின் மனைவி ராமலட்சுமி (33) என்பவரது வீட்டின் பீரோவில் வைத்திருந்த 10-25 பவுன் தங்க நகை பீரோ உடைக்கப்பட்டு திருடு போனது கண்டு ராமலட்சுமி அதிர்ச்சி அடைந்தார். 

இது குறித்து ராமலட்சுமி சங்கரலிங்கபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார், புகாரின் பேரில் தடையியல் நிபுணர் மற்றும் சங்கரலிங்கபுரம் காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர், இந்நிலையில் விசாரணையின் முடிவில் கீழக்கல்லூரணி கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து என்பவரின் மகன் வினோத்குமார் (20), முத்துராமலிங்கம் என்பவரின் மகன் அஜய் (19), விளாத்திகுளம் - மீரான்பாளையம் தெரு பகுதியை சேர்ந்த முனியசாமி என்பவரின் மகன் பாலமுருகன் (24), மற்றும் கீழக்கல்லூரணி கிராமத்தைச்சேர்ந்த 16 வயதுடைய இரண்டு சிறார்கள் ஆகியோர் 5 பேரும் சேர்ந்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதை  தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி ஊரில் யாரும் இல்லாத நேரத்தில் ராமலட்சுமியின் வீட்டில் உள்ள பீரோவை உடைத்து  தங்க நகைகளை திருடியது தெரிய வந்தது, இதனை அடுத்து இரண்டு சிறார்கள் உட்பட 3 பேரையும் சங்கரலிங்கபுரம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பேருந்து வசதிக்காக சாலை மறியலில் ஈடுபட்ட போது நகை திருடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.