விளாத்திகுளம் அருகே குடியரசு தின விழாவை முன்னிட்டு கிராம சபை கூட்டம் : பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்த கிராம மக்கள்!
இந்திய சுதந்திரத் திருநாட்டின் 77- வது குடியரசு தின விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள V. வேடப்பட்டி கிராமத்தில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது, இந்த கூட்டத்தின் போது விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனிடம் அக்கிராம மக்கள் குடிநீர் மற்றும் விவசாய பயிர் காப்பீட்டுத் தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்தனர், கிராம மக்கள் முன்வைத்த கோரிக்கைகள் அனைத்தும் விரைவில் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் உறுதியளித்தார், மேலும் கிராமத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார். அதனைத் தொடர்ந்து அனைவரும் தேசிய வாக்காளர் தின உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
இந்நிகழ்வில் விளாத்திகுளம் வட்டார வளர்ச்சி அலுவலர் ரஞ்சித், விளாத்திகுளம் வட்டாட்சியர் கண்ணன்,விளாத்திகுளம் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் இமானுவேல்,பொதுக்குழு உறுப்பினர் ராஜாக்கண்ணு, வடக்கு மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் பாண்டியராஜன் உள்ளிட்ட ஊர் பொதுமக்கள் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.