101 வது பிறந்தநாள் காணும் மூதாட்டி பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடி மகிழ்ந்து குடும்பம்:நான்காம் தலைமுறைகண்ட மூதாட்டியிடம் ஆசி பெற்ற கிராமத்தினர் - விளாத்திகுளம் அருகே ரூசிகரம்!



தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள உள்ள கடலையூர் கிராமத்தைச் சேர்ந்த பாலையா என்பவருடைய மனைவி பாக்கியம். 1924ம் ஆண்டு மே மாதம் பிறந்த மூதாட்டி பாக்கியம் இந்த ஆண்டு  101வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதை முன்னிட்டு அவரது குடும்பத்தினர் மூதாட்டி பிறந்தநாளை வெகு விமர்சையாக கொண்டாட முடிவெடுத்து   திங்கட்கிழமை இரவு தனியார் திருமண மண்டபத்தில்  தடபுடலாக கொண்டாடினர்.   நான்கு  தலைமுறைகளைக் கண்ட மூதாட்டி பாக்கியம் மூன்றாவது பிறந்த நாளை முன்னிட்டு அவரது குடும்பத்தினர் உறவினர்கள் ஆங்காங்கே டிஜிட்டல் பிளக்ஸ் போர்டுகளை வைத்து அசத்தினர். மேலும் மூதாட்டியின் 101 வது பிறந்தநாளை கொண்டாடு வகையில் அவரது தலையில் மலர்கீரிடம் வைத்து,  கேக் வெட்டி கொண்டாடினர்.


மூதாட்டி பாக்கியத்திற்கு  3 மகன்கள், ஐந்து மகள்கள் என 8 பிள்ளைகள். அவர்கள் அனைவருக்கும் திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். மூதாட்டி பாக்கியத்தின் மகன், மகள்கள் , பேரன் பேத்திகள், பூட்டன் பூட்டிகள் அனைவரும் அவரிடம் ஆசி பெற்றது மட்டுமின்றி புகைப்படங்களும் எடுத்துக்கொண்டனர்.  மூதாட்டியின் குடும்பத்தினர், உறவினர்கள் மட்டுமின்றி  கடலையூர் கிராம மக்கள் என அனைவரும் பங்கேற்று மூதாட்டி பாக்கியத்திடம் ஆசி பெற்றனர். விழாவில் கலந்து கொண்ட அனைவரும் நா சுவைக்கும் வகையில் பிரியாணி விரும்பும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது...