விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் சார்பில் நடைபெற்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தின் 8-ம் நாள் திருவிழா - மேளதாளம் முழங்க கோவிலுக்கு ஊர்வலமாக  வந்த அரசு அலுவலர்கள் :  பச்சை சாத்தி எழுந்தருளிய நடராஜர் வீதி உலா!"



தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் அமைந்துள்ள 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் 30-ம் ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது . இதில் 8-ம் திருவிழாவான இன்று விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் சார்பில் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு இன்று விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலிருந்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அலுவலகப் பணியாளர்கள் என ஏராளமானோர் மேளதாளம் முழங்க ஊர்வலமாக வந்து கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்துகொண்டு சுவாமி அம்பாள் எழுந்தருளிய சப்பரத்தினை வடம் பிடித்து இழுத்து நகர்வலம் வந்தனர். பின்னர் கோவிலுக்கு வந்திருந்த பொதுமக்கள் அனைவருக்கும் அருட்பிரசாதம் வழங்கப்பட்டது.




(விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தின் சித்திரை திருவிழாவை முன்னிட்டு 8-ம் திருநாளான இன்று நடராஜர் பச்சை சாத்தி பக்தர்களுக்கு எழுந்தருளும் நிகழ்வானது, விவசாயம் செழித்து பசுமையுடன் உலக மக்கள் அனைவரும் நலமுடன் வாழ வேண்டும் என்பதற்காக இந்நிகழ்வு நடத்தப்படுகிறது என்று சொல்லப்படுகிறது.)