சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிய விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் !



தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் விளாத்திகுளம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 150 மீட்டர் தொலைவில் கடந்த 2001-ம் ஆண்டு திறக்கப்பட்டு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர்கள் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் மக்களை சந்தித்து வந்தனர்.


இந்த நிலையில் கடந்த 2021- ம் ஆண்டு கொரோனாவின் தாக்கத்தினால், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை மக்களின் மருத்துவ சேவைக்காக கலைஞர் மருத்துவமனை பெயர் மாற்றப்பட்டு அதற்கான திறப்பு விழா நடைபெற்றது, இதில் சிறப்பு விருந்தினராக அப்போதைய மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, அமைச்சர் கீதாஜீவன் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் ஆகியோர் மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தனர்.

அவ்வாறு திறந்து வைக்கப்பட்ட கலைஞர் மருத்துவமனையில்  பகல் வேளையில் இரு செவிலியர் மற்றும் ஒரு மருத்துவர் மற்றும் இரவு நேரங்களில் ஒரு மருத்துவர் இரண்டு செவிலியர்கள் பணியாற்றி வந்தனர்.கொரோனா காலங்கள் முடிவடைந்த நிலையில் இரண்டு செவிலியர்கள் மட்டுமே பணியாற்றி வந்தனர், தற்போது செயல்பாட்டில் இல்லாத கலைஞர் மருத்துவமனைக்கு இரண்டு செவிலியர்கள் பணியில் உள்ளதாக கூறப்படுகிறது, ஆனால் கலைஞர் மருத்துவமனையில் ஆங்காங்கே மது பாட்டில்கள், சமூகவிரோதிகள் மலம் கழித்து வைப்பது, மதுபோதையில் சமூக விரோதிகள் மருத்துவமனை கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளது,தற்போது சமூக விரோத்களின் கூடாரமாக மாறி உள்ளது.

தற்போது கொரோனா காலங்கள் முடிவடைந்த நிலையில் விளாத்திகுளம் பேருந்து நிலையத்திலிருந்து 150 மீட்டர் தொலைவில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் இருக்கும் நிலையில், பொதுமக்கள் விளாத்திகுளம் பேருந்து நிலையத்திலிருந்து 500 மீட்டர் தொலைவில் இருக்கும் அம்பாள் நகரில் உள்ள விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டயேனின் இல்லம் அருகே உள்ள கட்சி அலுவலகத்திற்கு பொதுமக்கள் முதல் வயதான முதியவர்கள் வெகுதூரம் சென்று சட்டமன்ற உறுப்பினரை சந்தித்து தங்களின் கோரிக்கைகளை  சட்டமன்ற உறுப்பினரிடம் முன்வைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.


அதேபோல் விளாத்திகுளம் பேருந்து நிலையத்திலிருந்து 12 0மீட்டர் தொலைவில் இருக்கும் விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில்  தற்போது பல கோடி மதிப்பில் கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன, அங்கு காலை 7:00 மணி முதல் நண்பகல் 1 மணி வரை வெளி நோயாளிகள் சிகிச்சை நேரமாக உள்ளது, ஆனால் மருத்துவர்கள் 11 அல்லது 12 மணி வரை மட்டுமே வெளி நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருவதாக கூறப்படுகிறது.



ஒரு விபத்து அல்லது தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு வரும் நோயாளிகளுக்கு இங்கு முறையான அவசர சிகிச்சை வசதி இல்லை என்றும், அவ்வாறு அவசர மருத்துவ சிகிச்சைக்கு வரும் நோயாளிகளை கோவில்பட்டி அல்லது தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு 108 வாகனத்தில் அனுப்பி வைப்பதாகவும், அவ்வாறு அனுப்பி வைக்கப்படும் அவசர சிகிச்சை நோயாளிகள் செல்லும் வழியிலே உயிரிழக்கும் நிலை தொடர்ந்து வருகிறது.


விளாத்திகுளம் தொகுதியின் முக்கிய மருத்துவமனையாக கருதப்படும் விளாத்திகுளம் அரசு மருத்துவமனையிலேயே பொது மக்களுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படாத நிலையில், தற்போது செயல்படாமல் இருக்கும் கலைஞர் மருத்துவமனை எதற்கு? என்று விளாத்திகுளம் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட கிராம மக்கள்  குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்.

எனவே சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகமாகவே செயல்பட வேண்டும் என்று தமிழக அரசுக்கு விளாத்திகுளம் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பேட்டி:பெருமாள்சாமி.