சூரங்குடியில் கூட்டு குடிநீர் திட்டம் குறித்து அதிகாரிகளுடன் விளாத்திகுளம் MLA ஆய்வு..!




தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் தூத்துக்குடி மாவட்டத்தில் ஜல் ஜூவன் மிஷின் (JJM) மூலமாக தூத்துக்குடி(61), ஓட்டப்பிடாரம்(88), புதூர்(83), விளத்திகுளம்(93), கயத்தார்(16), கோவில்பட்டி(22) ஆகிய ஆறு ஊராட்சி ஒன்றியங்கள் உட்பட்ட 363 குடியிருப்புகளுக்கு கூட்டுக் குடிநீர் திட்டம் (CWSS) மூலம் குடிநீர் வழங்கும் திட்டம் 2025-2026 நடைமுறைப்படுத்தப்பட்டு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று விளாத்திகுளம் அருகே உள்ள சூரங்குடியில் வளர்ச்சிப்பணிகள் துவக்க விழாவிற்கு வருகை தந்த விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், தூத்துக்குடி மாவட்ட குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் ராஜா மற்றும் உதவிப் பொறியாளர்களிடம் இத்திட்டம் குறித்து கேட்டறிந்து விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் வழங்கும் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருவதாக பாராட்டுக்களை தெரிவித்து, எஞ்சியுள்ள பகுதிகளுக்கும் மிக விரைவில் குடிநீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், 363 குடியிருப்பதற்கு குடிநீர் வழங்கும் இத்திட்டம் கொண்டுவரப்பட்ட ஓராண்டுக்குள்ளாகவே நடைமுறைப்படுத்தப்பட்டு திட்டத்தின் மூலம் பொதுமக்கள் பலர் பயனடைவதாகக்கூறி மகிழ்ச்சியடைந்தார். அதுமட்டுமின்றி, தூத்துக்குடி மாவட்டத்தில் 6 ஊராட்சி ஒன்றியங்களில் 363 குடியிருப்புகளுக்கு கொண்டு வரப்பட்ட இந்த சிறப்பு கூட்டுக் குடிநீர் திட்டத்தில் விளாத்திகுளம் தொகுதியில் மட்டுமே 222 குடியிருப்புகள் என்பது குறிப்பிடத்தக்கது.