பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட விளாத்திகுளம் MLA மார்கண்டேயன்!


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே  குளத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட பனையூர்,P.கெச்சிலாபுரம், மேட்டுப்பனையூர்,கெச்சிலாபுரம்,இராமச்சந்திராபுரம்,இராமநாதபுரம், முத்துராமலிங்கபுரம், கு.சுப்பிரமணியபுரம், ஆதிதிராவிடர்காலனி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்க கோரிக்கை மனுக்களை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்ற சட்ட விதிகள் ஆய்வுக் குழு தலைவர்,தலைமை செயற்குழு உறுப்பினர் மார்கண்டேயன் அவர்கள் பெற்றுக்கொண்டார்.

நிகழ்வில் விளாத்திகுளம் வட்டாட்சியர் ராமகிருஷ்ணன் கிராம நிர்வாக அலுவலர்கள் முனியசாமி, உலகநாதன்,மாரிமுத்து, பாரதிராஜா விளாத்திகுளம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி சமூக வலைதள அணி ஒருங்கிணைப்பாளர் கரண்குமார் உட்பட கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.