தியாகி இம்மானுவேல் சேகரனாருக்கு விளாத்திகுளம் MLA மார்க்கண்டேயன் மரியாதை!
ஒடுக்கப்பட்ட விளிம்பு நிலை மக்களுக்காக போராடிய சமூக நீதிப் போராளி தியாகி இமானுவேல் சேகரனார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பாரதியார் பேருந்து நிலையம் முன்பு அமைக்கப்பட்டுள்ள படத்திற்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் மலர் தூவி மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கினார்.
உடன் விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன்,விளாத்திகுளம் பேரூர் கழக செயலாளர் வேலுச்சாமி, விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யா அய்யன்ராஜ், தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல், தமிழர் விடுதலைக் கழக மாவட்டச் செயலாளர் சரவணகுமார், தமிழர் விடுதலை கழக நகர செயலாளர் மகாராஜன், ஒன்றிய பிரதிநிதி பால்லிங்கம், தூத்துக்குடி வடக்கு மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் பிரதீபா, ,விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.