விளாத்திகுளம் அருகே பாலத்தின் பணிகளை விளாத்திகுளம் MLA மார்கண்டேயன் பார்வையிட்டு ஆய்வு. 

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள பிள்ளையார்நத்தம் கிராம குளத்தில் பொதுமக்கள் காட்டில் பணி செய்வதற்கு ஏதுவாக ரூ.15-லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பாலத்தின் பணிகளை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்தஆய்வின்போது மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல், சூரங்குடி கூட்டுறவு சங்க செயலாளர் ராமச்சந்திரன் மற்றும் பிள்ளையார்நத்தம் கிராம பொதுமக்கள் பலர் உடன் இருந்தனர்.