எட்டையாபுரத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணியினை விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்கண்டேயன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்!
தூத்துக்குடி மாவட்டம் - எட்டையாபுரம் வடக்கு ரதவீதி சாலையில் ரூ.15- லட்சம் மதிப்பீட்டில் 600 மீட்டர் தூரத்திற்கு தார்ச்சாலை அமைக்கும் பணியினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் துவக்கி வைத்தார்.
நிகழ்வில் உதவி கோட்ட பொறியாளர் கணேஷ்குமார், உதவி பொறியாளர் ஜெயன், கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீதக்கண்ணன், விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல்,மகளிர் அணி முருகலட்சுமி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.