மழையினால் சேதமடைந்துள்ள மிளகாய் பயிர்களை விளாத்திகுளம் MLA ஆய்வு!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே விருசம்பட்டி, மாமுநயினார்புரம், வேடப்பட்டி மற்றும் அருகில் உள்ள கிராமங்களில் பருவம் தவறிய மழையினால் சேதமடைந்துள்ள சம்பாய் மிளகாய்,முண்டு மிளகாய் ஆகிய பயிர்களை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்ற சட்ட விதிகள் ஆய்வுக் குழு தலைவர், தலைமை செயற்குழு உறுப்பினர் மார்கண்டேயன் ஆய்வு செய்து விளாத்திகுளம் மற்றும் புதூர் சுற்றுவட்டாரப் பகுதி விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் கிடைப்பதற்கு துறை சார்ந்த அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.