விளாத்திகுளம் அருகே ரூபாய் 47.60 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக்சாலை அமைக்கும் பணியினை விளாத்திகுளம் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள அயன்கரிசல்குளம் கிராமத்தில் ரூபாய் 47.60 லட்சம் மதிப்பீட்டில் புதிய பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் பூமி பூஜை செய்து பணியினை தொடங்கி வைத்தார்,அதனைத் தொடர்ந்து கிராமத்தின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார்.
இந்நிகழ்வில் புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் தினகரன், உதவி பொறியாளர் ரவிச்சந்திரன், புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.