பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கிய மார்க்கண்டேயன் MLA.!


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு பயிலும் மாணவ -  மாணவிகளுக்கும், நாகலாபுரம் சாமி அய்யா நாடார் மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கும் தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகளை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர்,சட்டமன்ற சட்ட விதிகள் ஆய்வு குழு தலைவர்,தலைமை செயற்குழு உறுப்பினர் மார்கண்டேயன் வழங்கினார். இந்நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியர் பொறுப்பு கிருஷ்ணமூர்த்தி, புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி, விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு, விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இமானுவேல், புதூர் பேரூராட்சி மன்ற தலைவர் வனிதா அழகுராஜ், வார்டு உறுப்பினர்கள் வெற்றிவேலன், தினகர், தங்கமுத்து, அங்காள ஈஸ்வரி புதூர் மேற்கு ஒன்றிய அவைத்தலைவர் பொன்ராஜ், வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் அழகுராஜ், முன்னாள் பேரூர் கழகச் செயலாளர் பாலகிருஷ்ணன், வார்டு செயலாளர் ராமசாமி, விளாத்திகுளம் பேரூர் கழக தேர்தல் பார்வையாளர் ராமச்சந்திரன், புதூர் கிழக்கு ஒன்றிய வர்த்தக அணி அமைப்பாளர் வாசுதேவன், புதூர் மத்திய ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் மோகன்தாஸ், கம்பத்துப்பட்டி கிளைச் செயலாளர் செல்லப்பாண்டி, இளைஞர் அணி சதீஷ்குமார், கார்த்திக் ராஜா மகளிர் அணி ராசாத்தி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் ஆசிரிய - ஆசிரியைகள் மாணவ -மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர்.