விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் தீயணைப்புதுறை சார்பில் தீர்த்தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி!


தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்ப பணிதுறை சார்பில் தமிழக முழுவதும் தீத்தொண்டு வார நாள் விழா கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி துவங்கி இந்த மாதம் 20ம் தேதி வரை பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தீர்த்தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது, இதன் ஒருபகுதியாக தூத்துக்குடி மாவட்ட துணை இயக்குனர் சரவணபாபு அறிவுரைத்தலின் பேரில், விளாத்திகுளம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலைய அலுவலர் மு.சங்கரன் தலைமையிலான தீயணைப்பும் மற்றும் மீட்புபணி வீரர்கள் விளாத்திகுளம் அரசு மருத்துவமனை வளாகத்தில் மருத்துவர் மற்றும் செவிலியர்,பணியாளர்களுக்கு தீர்த்தடுப்பு மற்றும் மீட்பு பணி உபகரணங்களை கொண்டு எதிர்பாராத தீ விபத்துகளில் இருந்து தங்களை காத்துக் கொள்ளவும் மின் சாதனங்கள், எரிபொருள் சிலிண்டர் பட்டாசு போன்ற பெரிய விபத்துகள் இருந்து பாதுகாத்துக்கொள்வது குறித்தும்,பேரிடர் காலங்களில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வது குறித்தும் தீயணைப்பு வீரர்கள் செயல்விளக்கம் அளித்து துண்டு பிரசுரங்களை வழங்கினர்.