விளாத்திகுளம் தொகுதி விடுதலை சிறுத்தை கட்சிக்கு!
தற்போது 2026 காண சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, நாம் தமிழர், தமிழக வெற்றி கழகம் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் தேர்தல் பணியில் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேசிய ஜனநாயக கட்சி + அதிமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதி என்று முடிவு செய்யப்பட்ட நிலையில், திமுக கூட்டணியில் தற்போது வரை இழுபறி நீடித்து வருகிறது.
திமுக கூட்டணியை பொருத்தவரை காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதியும்,விடுதலை சிறுத்தை கட்சிக்கு 8 தொகுதியையும், தேமுதிக கட்சிக்கு 10 தொகுதியும், சிபிஎம் கட்சிக்கு 5 தொகுதியும் சிபிஐ கட்சிக்கு 5 தொகுதியும், மதிமுகவிற்கு4 தொகுதியும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 2 தொகுதியையும் கொங்கு மண்டல தேசிய கட்சிக்கு 2 தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது, நடிகர் கருணாஸ் உள்ளிட்ட சிறிய கட்சிகளுக்கு தலா 1 தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது, திமுக கூட்டணியில் இருக்கும் ஒரு சில கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கப்படாத நிலையில் உள்ளுக்குள் அக்கட்சியினருக்கு வருத்தம் இருந்தாலும் திமுகவிற்கு ஆதரவு தெரிவிப்பதாக தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக கமலஹாசன் திமுகவை ஆதரித்து வருகின்ற சட்டமன்றத்தேர்தலில் பிரச்சாரம் மேற்கொள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதேபோல் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல் திருமாவளவன் இரட்டை இலக்கு கொண்ட தொகுதிகளை கேட்டிருந்த நிலையில், ஒற்றை இலக்கான 8 தொகுதிகள் மட்டுமே திமுகவிலிருந்து வழங்கப்பட்டுள்ளது.
இதனால் அனைத்து தொகுதியிலும் உள்ள விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்பமான அளிக்கலாம் என்று கூறிவந்த நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள விடுதலை சிறுத்தை கட்சியினர் தங்களின் தொகுதியில் போட்டியிட விருப்பமானவை அளித்தனர், இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்காக விளாத்திகுளம் விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்ட செயலாளர் ஆ.சடையாண்டி ரூபாய் 5000 செலுத்தி விருப்பமான கொடுத்துள்ளார்.
விளாத்திகுளம் தொகுதி திமுக கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு ஒதுக்க இருப்பதாக கூறி வந்தநிலையில், மீண்டும் திமுகவிற்கு விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி ஒதுக்கப்படுவதாக கூறப்படுகிறது, இதில் விளாத்திகுளம் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டயேன் மீண்டும் திமுகவில் போட்டியிட உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றனர்.
ஆனால் திமுக மாநில நெசவாளர் அணி துணைச்செயலாளர் A.C வசந்தம் ஜெயக்குமார் இந்த முறை திமுகவில் போட்டியிட வாய்ப்பளிக்குமாறு சென்னையில் உள்ள திமுக மூத்த நிர்வாகிகளிடம் தற்போது வரை முகாமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
இன்று மாலை 6 மணி அளவில் திமுக கட்சி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.