விளாத்திகுளம் அருகே குலசேகரப்பட்டினம் சென்று விட்டு வீடு திரும்பியவர் விபத்தில் மரணம்!


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் காமராஜர் நகர் 3வது தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் என்பவரின் மனைவி ஜோதிலட்சுமி (45), இவர் தனது மகன் முத்துராஜ் மற்றும் மருமகள் முத்துமணி ஆகியோருடன் இன்று இருசக்கர வாகனத்தில் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் சென்று விட்டு வீடு திரும்பும் போது, குளத்தூர் காவல் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனம் நில தடுமாறி விபத்துக்குள்ளானதில், தலையில் பலத்த காயம் அடைந்த ஜோதிலட்சுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.


இதனை அடுத்து ஜோதிலட்சுமியின் உடலை கைப்பற்றிய குளத்தூர் காவல் நிலைய போலீசார் விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத ஆய்வுக்காக அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.