அதிமுக  ஆட்சியில் 'தாலிக்கு தங்கம்" திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும் விளாத்திகுளம் அதிமுக வேட்பாளர் சத்யா வாக்குறுதி!



தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி சார்பில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் சத்யா சின்னமலைக்குன்று,வங்காருபட்டி, பிதபுரம் சுரைக்காய் பட்டி கசவன் குன்று,ஈராச்சி, T.சண்முகபுரம், வாலம்பட்டி, மேலஈரால் கீழஈரால்,கீழஈரால்  காலனி,பிதப்புறம், இளம்புவனம்  உள்ளிட்ட பகுதிகளில்  தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினருடன் சேர்ந்து இரட்டை இலை சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.



அப்போது பேசிய அதிமுக வேட்பாளர் சத்யா...  பெண்களுக்கு ஊக்கத்தொகை ஆயிரத்திலிருந்து 2000 ரூபாயாக உயர்த்தப்படும்...



வயதான முதியவர்களுக்கு, முதியோர் உதவித்தொகை ஆயிரத்தில் இருந்து 2000 ரூபாயாக உயர்த்தப்படும்...


கழக ஆட்சி அமைந்த உடன் உங்கள் வங்கி கணக்கில் 10 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்படும்...



தாலிக்கு தங்கம் கடந்த ஐந்து வருடமாக இல்லை, ஆட்சி வந்த உடன் தாலிக்கு தங்கம் திட்டம் செயல்படுத்தப்படும்...



வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த இளைஞர்களுக்கு 2000 ரூபாயும்,+2 படித்த இளைஞர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதி அளித்தார்.



கீழஈரால் கிராமத்தில்  மேம்பாலம் அமைக்கப்படும், ஆரம்ப சுகாதார நிலையம் சரி செய்யப்படும்...



இந்நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்.கே பெருமாள், அதிமுக கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன்,தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மாவட்ட செயலாளர் ராஜகோபால்,ஓ.எஸ். ஆர்.ரகுபதி,அதிமுக பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், பாஜக நிர்வாகிகள் ராம்கி, கந்தசாமி,கீழஈரால் கிளைச் செயலாளர் செல்வம், அதிமுக நிர்வாகி முனியசாமி,அதிமுக மகளிர் அணி சாந்தி,பிரியா, மேலஈரால் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மோகன் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.