உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு உதவித்தொகை வழங்குவதற்கு ஏற்பாடு செய்து கொடுத்த விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன்!
பெற்றோரை இழந்த சிறு குழந்தைகளுக்கு உதவி தொகை உடனடியாக வழங்க அதிகாரிகளுக்கு போன் செய்து நடவடிக்கை எடுத்தார் அப்போது தேவைப்பட்டால் சமூக நலன் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவனிடம் பேசி பேசுகிறேன் என்று என்று கூறி உடனடியாக அவர்களுக்கு உதவித்தொகை வழங்க ஏற்பாடு செய்யுங்கள் என்று கூறினார்.
மின் இணைப்பு பெயர் மாற்றம் மனு மீது உடனடி தீர்வு மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. சான்று வழங்கினார்.
தமிழகம் முழவதும் கடந்த செவ்வாய் கிழமை முதல் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. மகளிர் உரிமைத்தொகை விண்ண்ப்பம், ,வருவாய்த்துறை, ஊராட்சித்துறை, மருத்துவத்துறை,காவல்துறை, மின்வாரியத்துதுறை,பட்டாவில் பெயர்மாற்றம், வாரிசுசான்றிதழ்,குடிநீர் இணைப்பு,தொழில் வரி விதிப்பு, ஆதார் அட்டை திருத்தம், முதியோர் உதவித்தொகை, தெருவோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை, இலவச பட்டா மனை வழங்குதல் என 16 துறை சார்ந்த பிரச்சினை, கோரிக்கை தொடர்பாக இந்த முகாமில் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் பொதுமக்களிடமிருந்து 684 கோரிக்கை மனுக்களை பெற்றனர்.
அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் பேரூராட்சியில் உட்பட்ட 9வது வார்டு முதல் 15வது வார்டு பகுதிகளில் உள்ள பொதுமக்கள் கலந்துகொண்டு 684 கோரிக்கை மனுக்களை கொடுத்தனர், உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாமினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர்.மார்க்கண்டேயன் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
பொதுமக்களின் குறைகளை கேட்டு அறிந்தார், அப்போது,பெற்றோரை இழந்த குழந்தைக்கு, உதவித் தொகை கேட்டு கண்ணீர் மல்க எம்.எல்.ஏ மனு அளித்த மூதாட்டி, உடனடியாக அதிகாரிகளுக்கு போன் செய்து பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு உதவித்தொகை வழங்குவதற்கு ஏற்பாடு செய்து கொடுத்த சட்டமன்ற உறுப்பினர்.
பெற்றோரை இழந்த சிறு குழந்தைகளுக்கு உதவி தொகை உடனடியாக வழங்க அதிகாரிகளுக்கு போன் செய்து நடவடிக்கை எடுத்தார் அப்போது தேவைப்பட்டால் சமூக நலன் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவனிடம் பேசி பேசுகிறேன் என்று என்று கூறி உடனடியாக அவர்களுக்கு உதவித்தொகை வழங்க ஏற்பாடு செய்யுங்கள் என்று கூறினார்.
மின்வாரியத்தில் இணைய வழி மூலமாக பெயர் மாற்றம் செய்த பயனாளி ஒருவருக்கு உடனே உத்தரவினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், வழங்கினார்.இந்நிகழ்ச்சியில்,கோவில்பட்டி கோட்டாட்சியர் மகாலட்சுமி, எட்டையாபுரம் பேரூராட்சி மன்ற தலைவி இராமலட்சுமி சங்கரநாராயணன், எட்டையாபுரம் தாசில்தார் சுபா, உட்பட துறை சார்ந்த அதிகாரி பலர் கலந்து கொண்டனர்.