விஜய் ஒரு தீர்க்கமான சிந்தனை இல்லாத மண்ணாங்கட்டி: ஸ்டாலின் ஆட்சிக்கு காலம் இன்னும் 70 நாள் மட்டுமே உள்ளது, ராம சீனிவாசன் பேட்டி!
தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரத்தில் பாஜக சார்பில்,தூத்துக்குடி வடக்கு மாவட்ட துணைத் தலைவர் ஆத்திராஜ், தலைமையில், தூத்துக்குடி வடக்கு மாவட்டத் தலைவர் சரவணகிருஷ்ணன், எட்டையாபுரம்ஒன்றிய தலைவர் சரவண குமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் ராம்கி, ஆகியோர் முன்னிலையில், மக்களுக்காக மக்களிடமிருந்து 2026 சட்டமன்றத் தேர்தல் அறிக்கை வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்த பாஜக மாநில பொதுச் செயலாளர் ராம சீனிவாசன், அதற்கு முன்னதாக எட்டையாபுரம் பாரதியார் மணிமண்டபத்தில் மகாகவி பாரதியாரின் முழு திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில், விவசாய அணி தலைவர்ஜெய கண்ணன்,இளைஞர் அணி தலைவர் பொன்ராஜ், நெசவாளர் பிரிவு தலைவர் நாகராஜன், ஊடகப்பிரிவு தலைவர் சுந்தராஜன், ஒன்றிய பொதுச் செயலாளர்கள் ஹரிஹரசுதன்,ராமர், காளிராஜ்,
,சேதுராஜ் ,அமுதா ,மாவட்ட பொருளார் சீனிவாசன்,கண்ணன், நாகஜோதி சிவா, வெயிலுமுத்து உட்பட கழக நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய ராம சீனிவாசன், விளாத்திகுளம் தொகுதியில் பல ஆண்டுகளாக இரண்டு திட்டங்கள் நிறைவேற்றப்படாமல் உள்ளது, ஒன்று விளாத்திகுளம், குளத்தூர், புதூர் வழியாக கிழக்கு கடற்கரை சாலை யை ஒட்டி ரயில் தடம் வேண்டும்...
பம்பை - அச்சன்கோயில்- வைப்பார் நதியணைப்பு திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும், நதியணைப்பு திட்டம் நிறைவேற்றப்பட்டால் குடிநீர் தட்டுப்பாடு இருக்காது, தொழிற்சாலைக்கான நீர் ஆதாரம் விவசாயத்திற்கான நீர் ஆதாரம் கிடைக்கும் இந்த இரண்டு திட்டத்திற்கும் திமுக அரசு முனைப்பு காட்ட வில்லை, ஆற்றில் எவ்வாறு மணல் அள்ளுவது என்பது குறித்து முனைப்பு காட்டுவதாக கூறினார்.
எங்கள் முதலமைச்சர் எடப்பாடி இருந்து வழி காட்டுவார் என்று அமித்ஷா அறிவித்துள்ளார், எங்களுக்கான வழிகாட்டுதல் மோடி மற்றும் அமித்ஷாவிடம் இருந்து வரும், கூட்டணியாக சேர்ந்து தேர்தலை சந்திப்போம், எங்கள் கூட்டணியில் டிடிவி பாமக உள்ளிட்ட கட்சிகள் உள்ளன,கூட்டணி யில் மேலும் பல முக்கிய கட்சிகள் கூட்டணிக்கு வருவார்கள்.
ஸ்டாலின் ஆட்சி, திமுக ஆட்சிக்கு இன்னும் 75 நாட்கள் கெடுவிதிக்கப்பட்டுள்ளது,தேர்தல் கமிஷன் தேர்தல் அறிவித்தாள், திமுக ஆட்சிக்கு விடுக்கப்பட்ட கேடு.
விஜய் விசில் சின்னம் வாங்கி விட்டார், முதலில் டிடிவி காங்கிரஸ் கட்சியினர் கூட வருவார்கள் என்று நினைத்தார், "குக்கரில் விசில்" இருக்கும் என்று நினைத்தார், இப்ப என்ன பேசினால் எடுபடும் எடுபடாது என்று விஜய்க்கு தெரியாது, தனக்கு முன்னாள் இருப்பவர்கள் கைதட்டுவதற்காக பேசும் அரசியல் தான் விஜய் அரசியல், அதைத் தாண்டி தீர்க்கமான சிந்தனையோ பக்குவமோ அரசியல் தெளிவு இல்லாதவர், தமிழ்நாட்டைப் பற்றி முழுமையான புரிதல் இல்லாத ஒரு மண்ணாங்கட்டி தான் விஜய், கட்சியே ஒரு மண்ணாங்கட்டி கட்சி தான் ஒரு மழையிலேயே நனைந்து போய்விடும், அது சுலபமாக கரைந்து போகக்கூடிய கட்சி, விஜய் முன்னாள் கைதட்டும் ரசிகர்களை தாண்டி, வெளியில் இருக்கும் தமிழர்களை பற்றி விஜய்க்கு ஒன்றும் தெரியாது. அரசியல் திட்டங்கள் பற்றி விஜய்க்கு ஒன்றும் தெரியாது, ரசிகர்களை மட்டும் வைத்து கட்சியை நிர்மானிக்க முடியாது. தேர்தலுக்குப் பிறகு விஜய் கட்சி அரசியல் எதுவும் இருக்காது, விஜய் அரசியல் " பல் இழுத்து விடும் " அதன் பிறகு விஜய் பற்றி பேசுவதற்கு இங்கு யாரும் இருக்க மாட்டார்கள்.
ஓ.பன்னீர்செல்வம் பாஜக - அதிமுக கூட்டணிக்கு வர வேண்டும்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் குறித்து சமூக வலைதளங்களில் பாஜகவினர் ஒரு பதிவு செய்தால், காவல்துறையினர் நள்ளிரவு ஒரு மணி அளவில் கூட பாஜகவினரை கைது செய்வார்கள், ஆனால் செய்தியாளர்கள் தாக்கப்பட்டுள்ளனர் தற்போது வரை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்யவில்லை. செய்தியாளர் தாக்கப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறோம் என்று பாஜக மாநில பொதுச் செயலாளர் ராம சீனிவாசன் கூறினார்.