விளாத்திகுளத்தில் வீடியோ காலில் வந்த பிரச்சனை:  இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை?


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் காமராஜர் நகர் பகுதியை சேர்ந்த  வெள்ளைச்சாமி என்பவரின் மனைவி சௌமியா (27), இவர் எட்டையாபுரம் சாலையில் உள்ள ஒரு டெய்லர் கடையில் டெய்லராக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் சௌமியா ஒரு ஆண் நண்பருடன் செல்போனில் அடிக்கடி பேசி வந்ததாகவும் இதனை கணவர் வெள்ளைச்சாமி கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் 13-11-2024 புதன்கிழமை இரவு  சௌமியா வீடியோ காலில் ஒரு நபருடன் பேசிக் கொண்டிருந்ததாகவும்  இதனை கணவர் வெள்ளைச்சாமி கடுமையாக கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மன விரக்தியில் இருந்த சௌமியா 14-11-2024  வியாழக்கிழமை காலை வீட்டில் உள்ள  மற்றொரு அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.


இது குறித்து தகவல் அறிந்த விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் சௌமியாவின் உடலை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.