திமுக ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இது அறுவடை செய்யும் நேரம் - விளாத்திகுளத்தில் நடைபெற்ற திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் பேச்சு!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் வேட்பாளராக போட்டியிடுகிறார். இந்நிலையில் இன்று விளாத்திகுளத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டு பேசுகையில் ...
வறுமை கோட்டு பட்டியலில் உள்ளவர்கள் எண்ணிக்கை தமிழகத்தில் குறைந்து உள்ளது. தனிநபர் வருமானம் அதிகரித்து உள்ளது என்று ஒன்றிய அரசின் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
ஜவுளி உற்பத்தியில் தமிழகம் தான் முதலிடம். தோழி விடுதி திட்டத்தில் தமிழகம் தான் முதலிடம். இந்த தோழி விடுதி திட்டத்தை இந்தியா முழுவதும் ஒன்றிய அரசு கொண்டுவர உள்ளது .
எல்லா திட்டத்திற்கும் முன்னோடி தமிழகம் தான். தமிழ்நாடு வளர்ச்சி அடைந்துள்ளது என்பதை ஒன்றிய அரசின் புள்ளி விவரங்கள் கூறுகின்றன
திமுக அரசில் கொண்டுவரப்பட்ட பல திட்டங்கள் மூலமாக பலர் பயனடைந்துள்ளனர்.விளாத்திகுளம் பகுதியில் கலைஞர் கனவில் மூலமாக பலருக்கு வீடுகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தொகுதியில் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது .
திட்டங்கள் மூலம் பயனடைந்த மக்களை சந்தித்து வாக்குகளை பெற வேண்டும்.இவ்வளவு நாட்களாக விதைத்தோம் பணியாற்றினோம், தற்போது இது அறுவடை செய்யக்கூடிய நேரம். சிறியார் வீட்டு வேளாண்மை போல ஆகிவிடக்கூடாது. பக்குவமாக ஒரு ஓட்டு கூட சிதறவிடாமல் வாக்குகளை பெற்று தர வேண்டியது உங்களுடைய கடமை.
திமுகவின் வேர்களாகவும், விழுதுகளாக இருக்கக்கூடிய செயல்வீரரை நம்பி தான் 234க்கு 200 தொகுதிகளை திமுக வெல்லும் என்று உங்களை நம்பி முதல்வர் மு க ஸ்டாலின் கூறி வருகிறார்
கூட்டணி கட்சிகள் நமக்கு கூடுதல் பலம். புதிதாக தேமுதிக நம்முடன் இணைந்துள்ளது. நம்முடைய கூட்டணி பலமான கூட்டணி வலிமையான கூட்டணி என்றார்.