வைப்பார் - தாமிரபரணி நதிஇணைப்பு திட்டம் செயல்படுத்தப்படும் - மக்களுக்கான ஆட்சி அதிமுக ஆட்சி குடும்பத்துக்கான ஆட்சி அது திமுக ஆட்சி கடம்பூர் ராஜு பேச்சு!
தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் சத்யாவை ஆதரித்து சின்னவநாயக்கன்பட்டி கிராமத்தில் முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜு சின்னவநாயக்கன்பட்டி புதூர் பேரூராட்சி உள்ளிட்ட பகுதிகளில் இரட்டை இலை சின்னத்திற்கு தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார், அப்போது புதூரில் உள்ள சட்டமா மேதை டாக்டர் அண்ணல் அம்பேத்கரின் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அப்போது பேசிய கடம்பூர் ராஜு கடந்த 2016 முதல் 2021 ஆம் ஆண்டு வரை விளாத்திகுளம் தொகுதியில் மக்களுக்காக பல்வேறு திட்டங்களை செய்துள்ளோம், குறிப்பாக சின்னவநாயக்கன்பட்டி கிராமத்தில் புதிதாக தொடக்கப்பள்ளி அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது, மேலும் கடந்த அதிமுக ஆட்சியில் தாமிரபரணி வைப்பார் நதியணைப்பு திட்டம் செயல்படுத்த இருந்த நிலையில், திமுக ஆட்சி அமைந்ததால் அத்திட்டத்தை செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது, அதிமுக ஆட்சி வந்த உடன் மீண்டும் தாமிரபரணி வைப்பார் நதியினை திட்டம் செயல்படுத்தப்படும், சின்னவநாயக்கன்பட்டியில் புதிதாக மேம்பாலம் அமைக்கப்படும்.
அதேபோல் மக்களுக்கான நல்லாட்சி அமைய வேண்டும் என்றால் மக்கள் அதிமுகவிற்கு வாக்களிக்க வேண்டும், கருணாநிதியின் குடும்பத்திற்கான ஆட்சி அமைய வேண்டும் என்றால் நீங்கள் திமுகவிற்கு வாக்களிக்க வேண்டும்.
தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்திற்கு மாநில அரசு நிதி வழங்க முடியாது, மத்திய அரசினால் மட்டுமே நிதி வழங்க முடியுமென்று தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.
இந்நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன், ஒன்றிய செயலாளர்கள் தனஞ்செயன்,தனவதி, மாவட்டத் துணைச்செயலாளர் வெம்பூரார், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் மோகன், சிறுபான்மை நலப் பிரிவு சதீஷ், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மாவட்ட செயலாளர் ராஜகோபால், மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.