தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மேல சண்முகபுரம் ஊராட்சி வடக்குச்செவல் கிராமத்தில் புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டித்தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். அதனை ஏற்று விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியப் பெருந்தலைவர் முனியசக்தி இராமச்சந்திரன், ஒன்றியப் பொது நிதியிலிருந்து ரூ.20 லட்சம் ஒதுக்கீடு செய்து வடக்குச்செவல் கிராமத்தில் புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்ட உத்தரவிட்டதன் பேரில் அதற்கான ஒப்பந்தப்பணிகள் நடைபெற்று இன்று புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டுவதற்கு யூனியன் சேர்மன் முனியசக்தி இராமச்சந்திரன் தலைமையில் பூமி பூஜை நடைபெறுகிறது. இதில் மேல சண்முகபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் சித்திரை வேல், வட்டார வளர்ச்சி அலுவலர், ஒப்பந்தக்காரர், கிராம பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Vilathikulam
ரூ.20 லட்சம் மதிப்பில் புதிய மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி கட்டுவதற்கு யூனியன் சேர்மன் முனியசக்தி இராமச்சந்திரன் பூமி பூஜை!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
புதிய வகுப்பறை கட்டிடத்தை அமைச்சர் கீதா ஜீவன் திறந்து வைத்தார்.
அடுத்த
தார் சாலை சரியா போட்டு இருக்கா? அதிகாரிகள் ஆய்வு!
இதையும் படிக்கலாம்
கடும் வெயிலில் மாட்டு வண்டி போட்டியை தொடங்கி மாடுகளை துன்புறுத்தியதாக புகார்...
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு மாபெரும் கண் சிகிச்சை முகாம்!
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழா: விளாத்திகுளத்தில் உற்சாகத்துடன் கொண்டாடிய அதிமுகவினர்!
17 Oct 2026
நடிகரை ஆட்சி பொறுப்பிற்கு கொண்டு வந்திருக்கிறார்கள். அவர் நடித்துக் கொண்டிருக்கிறார் - அவருடைய அமைச்சரவை தூங்கிக் கொண்டிருக்கிறது…
16 Oct 2026