திமுக ஆட்சியில் 6 வயது சிறுமி முதல் 60 வயது மூதாட்டி வரை அனைவருக்கும் பாதுகாப்பில்லை : விளாத்திகுளம் அதிமுக வேட்பாளர் கிராமம் கிராமமாக வாக்கு சேகரிப்பு!




தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் சார்பாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளராக போட்டியிடும் சத்யா, ராமச்சந்திராபுரம்,முத்தையாபுரம், புதுக்கிராமம்,வாதாளக்கரை,கே.துரைச்சாமிபுரம்,கீழகல்லூரணி, மேலகல்லூரணி,கவுண்டன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில்  கூட்டணிக் கட்சியினருடன் சேர்ந்து இரட்டை இலை சின்னத்திற்கு  தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.



அப்போது பேசிய அதிமுக வேட்பாளர் சத்யா கடந்த ஐந்து ஆண்டுகளாக திமுக ஆட்சியில் 6 வயது சிறுமி முதல் 60 வயது மூதாட்டி வரை அனைவருக்கும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையே இருந்தது, எங்கு பார்த்தாலும் கஞ்சா போதை வாஸ்துகளால் சட்டம்  ஒழுங்கு தமிழகம் முழுவதும் சீர்குலைந்து இருந்தது,பால்,மின்கட்டணம்,சொத்து வரி உள்ளிட்ட விலைவாசியின் உயர்வால் மக்கள் பெரும் இன்னல்களை சந்தித்து வந்தனர், எனவே மக்களுக்கு நல்லாட்சி அமைந்திட மீண்டும் ஜெயலலிதா -  எடப்பாடியார் ஆட்சி அமைய இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.


இந்நிகழ்வில் புதூர் அதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் தனஞ்செயன், புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் தனவதி, அதிமுக மாவட்ட துணைச்செயலாளர் வெம்பூரார், அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட தலைவர் மோகன், சிறுபான்மை நலப்பிரிவு சதீஷ் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.