நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கல்லூரிக் கனவு -2025 திட்ட முகாமினை விளாத்திகுளம் MLA துவக்கி வைத்தார்!   


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஸ்ரீ அம்பாள் வித்யாலயா பள்ளியில் விளாத்திகுளம் மற்றும் புதூர் வட்டார அரசுப் பள்ளியில் 12-ம் வகுப்பு பயின்று நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர் கல்விக்கு வழிகாட்டும்  கல்லூரிக் கனவு -2025 திட்ட முகாமினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர்,சட்டமன்ற சட்டவிதிகள் ஆய்வு குழு தலைவர், தலைமை செயற்குழு உறுப்பினர் மார்கண்டேயன் துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.


நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட கல்வி அலுவலர் சிதம்பரநாதன்,தூத்துக்குடி மாவட்ட துணை செயல் திட்ட இயக்குனர் முனியசாமி,அம்பாள் கல்வி அறக்கட்டளை தாளாளர் வீமராஜ் அம்பாள், பள்ளி நிர்வாக அலுவலர் ராகவன், அம்பாள் பள்ளி முதல்வர் அமராதேவி, விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட பள்ளி மாணவ- மாணவிகள்  பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.