விளாத்திகுளம் அருகே லாரி மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழப்பு : ஒரு இளைஞர் கவலைக்கிடம்!




தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சூரங்குடி வடக்குசெவல் கிராமத்தை சேர்ந்த வீரா என்பவரின் மகன் பெத்துராஜ் (23) மற்றும் அதே கிராமத்தை சேர்ந்த  வேல்முருகன் என்பவரின் மகன் மாரிமுத்து (28),வேல்வாசகம் என்பவரின் மகன் மாரிலிங்கம் (19) ஆகிய மூன்று இருசக்கர வாகனத்தில் வடக்கு சேவல் கிராமத்திலிருந்து வேம்பார் நோக்கி சென்று கொண்டிருந்தபோது சிலுவைபுரம் பேருந்து நிலையம் அருகே எதிர்பாராத விதமாக எதிரே வந்த லாரி மீது  மோதி விபத்துக்குள்ளானதில் பெத்துராஜ் மற்றும் மாரிமுத்து ஆகியோர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தனர்.மாரி லிங்கம் என்பவர் தற்போது தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 



மேலும் இந்த விபத்து குறித்து சூரங்குடி காவல் நிலைய போலீசார் லாரி ஓட்டுனரான  திருநெல்வேலி மாவட்டம் கிளாக்குளம் பகுதி சேர்ந்த காத்தப்பன்  என்பவரின் மகன் மாரியப்பன் (43) என்பவரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.