விளாத்திகுளம் அருகே நள்ளிரவில் இரண்டு இருசக்கர வாகனம் மற்றும் 10,000 பணம் ,செல்போன் திருட்டு!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள அழகாபுரி கிராமத்தைச் சேர்ந்த முத்துக்கருப்பன் (78) என்ற முதியவர் வீட்டில் ரூபாய் 10,000 ரொக்க பணம் மற்றும் ஒரு செல்போன், அதேபோல் அழகாபுரி அருகே உள்ள கோடாங்கிபட்டி கிராமத்தில் மருதன் (45) என்பவரின் வீட்டிலும் தனுஷ்கோடி(57) என்பவரின் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த TVS XL வாகனத்தை மர்ம நபர்கள் திருடியது குறித்து மாசார்பட்டி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேபோல் இந்த திருட்டு சம்பவம் நடந்த நள்ளிரவு 2 மணி அளவில் நான்கு மர்ம நபர்கள் அழகாபுரி கிராமத்திற்குள் வந்ததாகவும் அழகாபுரி கிராம மக்கள் கூறுகின்றனர்.