எட்டயபுரத்தில் கள்ள நோட்டை புழக்கத்தில் விட முயன்ற வட மாநிலத்தை சேர்ந்த சேர்ந்தவர் உட்பட இருவர் கைது!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள எட்டையபுரம் கோவில்பட்டி நெடுஞ்சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் வேலை பார்த்து வந்த சப்ளையர் சரவணன் பள்ளிவாசல் தெருவில் உள்ள பெட்டிக்கடையில் மது போதையில் 500 ரூபாய் கள்ள நோட்டை கொடுத்து சிலரை மாற்ற முயன்ற பொழுது சந்தேகம் அடைந்த கடைக்காரர் எட்டயபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மது போதையில் இருந்த அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் 500 ரூபாய் கள்ள நோட்டை புழக்கத்தில் விட இருப்பது தெரியவந்தது மேலும் தான் வேலை செய்யும் அதே ஹோட்டலில் சைனீஸ் மாஸ்டரிடம் இதே போல் நிறைய பணம் இருப்பதாகவும் தெரிவித்ததை அடுத்து, தங்கியிருந்த விடுதிக்கு சென்ற போலீசார் அவனிடமிருந்து 70000 ரூபாய் மதிப்பிலான கள்ள நோட்டுகள் வைத்திருப்பது தெரியவந்தது,இதனை அடுத்து இருவரையும் போலீசார் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டதில் கோவில்பட்டி சரமாரி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த சரவணன் என்பதும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த குமார் சர்மா என்பதும் தெரிய வந்ததை அடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து கள்ள நோட்டு எங்கிருந்து வந்தது என்பது குறித்து எட்டயபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பட்டப் பகலில் எட்டயபுரத்தில் கள்ள நோட்டை புழக்கத்தில் விட்ட பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.