விளாத்திகுளம் அருகே தேசிய
நெடுஞ்சாலையில் பைக் மீது கார் மோதியதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலி!
தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் கான்சாபுரம் பகுதியில் சேர்ந்த கண்ணன்(38) என்பவர் ஐஸ் வியாபாரம் செய்து வருகிறார். இவர் அதே பகுதியில் சேலை வியாபாரம் செய்து வந்த சுந்தரி(38) என்ற பெண்ணுடன் சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில், இன்று இவர்கள் இருவரும் இரு சக்கர வாகனத்தில் சேலை வியாபாரம் செய்வதற்காக தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் விளாத்திகுளம் அருகே சிந்தலக்கரை சென்று கொண்டிருந்தபோது, பெங்களூரைச் சேர்ந்த மஞ்சுநாத் மகன் தர்ஷன் (30) என்பவர் வேகமாக ஓட்டி வந்த கார் முன்னாள் சென்று கொண்டிருந்த கண்ணன் - சுந்தரி இருசக்கர வாகனம் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்ட கண்ணன் - சுந்தரி இருவரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து தகவல் அறிந்து அங்கு சென்ற காவல் நிலைய போலீசார் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த கண்ணன், சுந்தரி இருவரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு, காரில் வேகமாக வந்து விபத்து ஏற்படுத்திய பெங்களூரைச் சேர்ந்த தர்ஷன் (30) என்பவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்...