விளாத்திகுளம் அருகே காற்றுபன்றி கடித்து இருவர் காயம்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள ஓ.துரைச்சாமிபுரம் கிராமத்தை சேர்ந்த குருசாமி என்பவரின் மகன் தர்மராஜ் (70), மற்றும் செல்லச்சாமி என்பவரின் மகன் முனியசாமி (22) ஆகியோர் இருவரும் 4-02-2025 செவ்வாய்க்கிழமை மாலை ஓ.துரைச்சாமிபுரம் கிராமம் அருகே உள்ள விவசாய நிலத்தில் கம்மங்கதிர் அள்ளிக் கொண்டிருந்தபோது, அப்பகுதியில் நாய்கள் விரட்டியதில் ஆக்ரோசத்துடன் வந்த காற்றுபன்றி ஒன்று முனியசாமி மற்றும் தர்மராஜ் ஆகியயோர் இருவரையும் கடித்துக்கொதறியது, இதில் காயமடைந்த இருவரும் விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பி உள்ளனர்.