கோவில்பட்டி அருகே குளிக்கச் சென்ற இரு சிறுவர்கள் கிணற்றில் மூழ்கி உயிரிழப்பு!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள பூசாரிபட்டி கிராமத்தை சேர்ந்த ஆகாஷ் (14) மற்றும் அதே கிராமத்தை சேர்ந்த ஜான் (14) என்ற இரு சிறுவர்களும் கிராமத்தின் அருகே உள்ள கிணற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது, கிணற்றில் குதிக்கும் போது ஒருவர் மீது ஒருவர் குதித்து மோதிக்கொண்டதில் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து உயிரிழந்த சிறுவர்களின் உடலை மீட்ட நாட்டின் முதல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து உயிரிழந்த சிறுவர்கள் குடும்பத்தினருக்கு நேரில் சென்று MLA கடம்பூர் ராஜு ஆறுதல் கூறினார்.