விளாத்திகுளம் அருகே விற்பனைக்காக 528 மதுபாட்டில்கள் மற்றும் 50 கிராம் கஞ்சா வைத்திருந்த இருவர் கைது!
மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் நிலைய போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள அயன் பொம்மையாபுரம் பகுதியில் சட்டவிரோதமாக விற்பனைக்காக மதுபாட்டில்கள் மற்றும் கஞ்சா ஆகியவற்றை வைத்திருந்த, அதே பகுதியைச் சேர்ந்த பூலோக பாண்டியன் மகன் பாலமுருகன் (39) மற்றும் பாலசுப்பிரமணியன் மகன் விஜயகுமார் (36) ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்த 528 மதுபாட்டில்கள் மற்றும் 50 கிராம் கஞ்சா ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.