விளாத்திகுளம் அருகே 540கிலோ ரேஷன் அரிசி கடத்த முயன்ற 2 பேர் கைது - 9 ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல்!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள பொன்னையாபுரம் கிராமத்தில் ரேஷன் அரிசி கடத்தல் ஈடுபட்ட தென்காசி மாவட்டம் கரிசல்குளத்தைச் சேர்ந்த சந்தன பாண்டியன் (28), கயத்தார் சிவஞானபுரத்தைச் பொன்ராஜ் (31)என்பது தெரிய வந்தது. மேலும் பொதுமக்களிடமிருந்து (சுமார் எடை 540கிலோ) ரேஷன் அரிசி விலைக்கு வாங்கி கொண்டு செல்வதற்காக வந்ததும் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து இருவரையும் கைது செய்த எட்டயபுரம் போலீசார்,அவர்களிடமிருந்து 9 ரேஷன் அரிசி மூடைகளை, தூத்துக்குடி நுகர் பொருள் வாணிப கழக அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். மேலும் இது குறித்து எட்டயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.