விளாத்திகுளம் அருகே அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்திய இரண்டு பேர் கைது!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள மாசார்பட்டி காவல் நிலைய போலீசார், மாசார்பட்டி காலனி பகுதிகள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேரை நிறுத்தி சோதனை செய்தபோது அவர்கள் சாக்குப் பையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது, இதனை அடுத்து புகையிலைப் பொருட்கள் கடத்தி வந்த N.வேடபட்டி கிராமத்தைச் சேர்ந்த ரத்தினசாமி என்பவரின் மகன் கார்த்திக்குமார் (32), மற்றும் வவ்வால் தொத்தி கிராமத்தைசேர்ந்த பால்சாமி என்பவரின் மகன் பொன்ராஜ் (34) ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த 18 கிலோ புகையிலை பொருட்கள் பாக்கெட்டுகள், மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.மேலும் அவர்களிடமிருந்த 18 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.