விளாத்திகுளம் அருகே இலங்கைக்கு 36 லட்சம் மதிப்புள்ள பீடிஇலைகள் கடத்திய இருவர் கைது!



தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள தெற்கு கல்மேடு உப்பள கடற்கரை பகுதிகளில் இருந்து இலங்கைக்கு பீடிஇலைகள் கடத்துவதாக வந்த தகவலின் அடிப்படையில் Q பிரிவு ஆய்வாளர் விஜய் அனிதா,உதவி ஆய்வாளர் ஜீவமணி தர்மராஜ்,சிறப்பு உதவி ஆய்வாளர் ராமர் , தலைமைக் காவலர் இருதய ராஜ்குமார்,  இசக்கி காவலர் பழனிமுருகன் உள்ளிட்ட Q போலீசார் தெற்கு கல்மேடு கடற்கரை செல்லும் உப்பள பகுதியில்  சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்திற்கு உரிய வகையில் அவ்வழியாக வந்த லோடு வேனை நிறுத்தி சோதனை செய்தபோது,வேனில்  இலங்கைக்கு கடத்த இருந்த 30 கிலோ எடை கொண்ட 40 மூடைகளிலிருந்து சுமார் 36 லச்சம் மதிப்புள்ள 1200 கிலோ பீடிஇலைகளை பறிமுதல் செய்தனர்.  



மேலும் கடத்தலில் ஈடுபட்ட லோடுவேன் ஓட்டுநர் விருதுநகர் மாவட்டம் மேட்டமலை தெற்கு தெரு பகுதியை சேர்ந்த சுடலைமணி மகன் காளிராஜ் (35), மற்றும் வெள்ளையாபுரம்  பெருமாள் என்பவரின் மகன் அஜித்பெருமாள் (24) ஆகிய இருவரையும் கைது செய்த Q பிரிவு போலீசார் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லோடு வேனையும் பறிமுதல் செய்தனர்.