ஸ்ரீவைகுண்டம் வனப்பகுதியில் அத்துமீரி தேக்கு மரங்களை வெட்டிய இருவர் கைது!


தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றுப் படுகை   வனச்சரகப்பகுதியில் உள்ளிட்ட பகுதிகளில் மர்ம நபர்கள் சிலர் இரவு நேரங்களில் தேக்கு உள்ளிட்ட மரங்களை வெட்டி கடத்துவதாக வந்த தகவலின் அடிப்படையில், ஸ்ரீவைகுண்டம் வனத்துறையினர் வனப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, வனப் பகுதியில் தேக்கு மரங்களை வெட்டி கடத்த முயன்ற மறுகால்தலை பகுதியை சேர்ந்த மாரியப்பன், பொன்னன் குறிச்சி பகுதியை சேர்ந்த இசக்கி ஆகிய இருவரையும் வனத்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.