விளாத்திகுளம் அருகே காச நோயில்லா இந்தியா 100 நாள் TP பிரச்சாரம்!
காச நோயில்லா இந்தியா 100 நாள் TP பிரச்சாரம் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேம்பார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குட்பட்ட (pearl city marine products) மீன் எண்ணெய் தயாரிக்கும் கம்பெனியில் காச நோய் கண்டறியும் முகாம் (ACF) நடைபெற்றது.
நடைபெற்ற முகாமில் பியர்ல் சிட்டி மெரைன் புராடக்ட்ஸ் உரிமையாளர் திரு.அலி V.M, நடமாடும் மருத்துவ குழு மருத்துவ அலுவலர் மரு.ராஜேசேகர் ஆகியோர் தலைமை தாங்கி பணியாளர்களுக்கு காசநோய் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி துவக்கி வைத்தனர். கம்பெனி மேலாளர் திரு.சாமுவேல் ராஜ் அவர்கள் முன்னிலை வகித்தார்கள். முகாமில் சுகாதார ஆய்வாளர் திரு.இராமலிங்கம், நடமாடும் மருத்துவ குழு, முதுநிலை சிகிச்சை மேலாளர் திரு.கணேசமூர்த்தி, முதுநிலை ஆய்வக மேற்பார்வையாளர் செல்வி. செல்வரதி, சுகாதார பார்வையாளர் திருமதி. அமுதா, அனைத்து MLHP, WHV,மற்றும் பொது மக்கள்,பணியாளர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.