விளாத்திகுளத்தில் த.வெ.க சார்பில் வீரமங்கை வேலுநாச்சியாருக்கு மரியாதை..!


இந்திய சுதந்திர போராட்டத்தின் முதல் பெண் வீரமங்கை இராணி வேலு நாச்சியார் நினைவு தினத்தை முன்னிட்டு தமிழக முழுவதும் பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் சமூக அமைப்புகள், பொதுமக்கள் என பலதரப்பினர் ராணி வேலு நாச்சியார் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர்கள் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி தமிழக வெற்றி கழகத்தின் சார்பில்,  தூத்துக்குடி வடகிழக்கு மாவட்ட த.வெ.க இணைச்செயலாளர் பொன் காசிராம் தலைமையில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு வைக்கப்பட்டிருந்த வீர மங்கை வேலு நாச்சியாரின் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினர்.


இந்நிகழ்வில், மாவட்டத் துணைத் தலைவர் முருகேஸ்வரி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் அழகு சௌந்தரி, கீர்த்தி, ராகிணி, மாவட்ட பொருளாளர் ஸ்ரீ பாலகிருஷ்ணன், புதூர் ஒன்றிய பொறுப்பாளர் செண்பகக்கனி, விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் விஜயகுமார், விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் தங்க மாரியப்பன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துராமலிங்கம், ரவிக்குமார், விளாத்திகுளம் நகரப் பொருளாளர் முத்துராமலிங்க சேதுபதி, விளாத்திகுளம் நகர மகளிரணி தேவி, மாவட்ட வழக்கறிஞர் அணி சண்முகராஜ் மற்றும் நிர்வாகிகள் பாண்டியராஜ், பேச்சிமுத்து, சந்தோஷ் குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.