விளாத்திகுளம் அருகே காற்றாற்று வெள்ளத்தின் காரணமாக 30க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து பாதிப்பு!
தற்போது தமிழக முழுவதும் பெய்து வரும் கனமழையின் காரணமாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் to பெருநாழி செல்லும் சாலை K. சுப்பையாபுரம் கிராமம் அருகே இரு பாலங்களை தாண்டி காற்றாற்று வெள்ளம் கரை புரண்டு செல்வதால் பேருந்து மற்றும் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது, இந்த சாலையின் வழியாக K. சுப்பையாபுரம், காடல்குடி,சின்னூர், மாவிலோடை, P.ஜெகவீரபுரம், உத்தாண்டாபுரம், கழுகாசலாபுரம், பூதலாபுரம்,N. ஜெகவீரபுரம், சங்கரப்ப நாயக்கன்பட்டி, சேர்வைக்காரன்பட்டி, கந்தசாமிபுரம், புதுசின்னையாபுரம், மாதலாபுரம், துரைச்சாமிபுரம், குமாரலிங்கபுரம், லட்சுமிபுரம், மல்லீஸ்வராபுரம், மிட்டாவடமலாபுரம் ஒரு லிட்டர் 30 கிராமங்களுக்கு செல்லும் இந்த பிரதான சாலை காற்றாற்று வெள்ளத்தினால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அதேபோல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு போடப்பட்ட இந்த சாலை அதே போன்று புதிதாக அமைக்கப்பட்ட 3 பாலங்களும் காற்றாற்று வெள்ளம் காரணமாக சேதமடைந்துள்ளது.