விளாத்திகுளம் அருகே  இருசக்கர வாகனம் மீது டூரிஸ்ட் வாகனம் மோதல் - சம்பவ இடத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழப்பு - வேன் ஓட்டுநரிடம் போலீசார் விசாரணை.




தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள பல்லாகுளம் கிராமத்தினைச் சேர்ந்தவர் குருசாமி(40),  லாரி டிரைவரான இவர் குளத்துரில் வசித்து வந்துள்ளார். இன்று மாலையில் குருசாமி தனது பைக்கில் அவரது சகோதரி முத்துலட்சுமி (48), தனது சகோதரர் முனியசாமி என்பவரது குழந்தைகள்  சுமித்ரன் (3), (5)முகில் மற்றும்  தூத்துக்குடி சேர்ந்த மாரியப்பன் என்பவர் மனைவி முருகம்மாள்    ஆகியோரை ஏற்றிக் கொண்டு வந்துள்ளார்  



இரு சக்கர வாகனத்தில் குளத்தூரில் இருந்து பல்லாவரம் கிராமத்திற்கு கிழக்கு கடற்கரை சாலையில் சென்று கொண்டிருந்த போது, முன்னாள் சென்ற பேருந்து  முந்த முயன்ற போது, இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் இருந்து தூத்துக்குடி நோக்கி வந்த சுற்றுலா வேனும்  இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிய விபத்தில்,பல்லாக்கு குளத்தை சேர்ந்த குருசாமி, முத்துலட்சுமி, முகில், சுமித்ரன் மற்றும் முருகம்மாள் ஆகிய ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்த ஐந்து பேரின் உடலை மீட்ட குளத்தூர் காவல் நிலைய போலீசார் உடற்கூறு ஆய்வுக்காக  தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்து ஏற்படுத்திய சுற்றுலா வேன் ஓட்டுநர் தூத்துக்குடியை சேர்ந்த பச்சைக்கிளி என்பவரை  பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.